பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு தனது காரில் மதுபாட்டில்களை கொண்டு வந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணனின் கார் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாண்டிச்சேரியில் இருந்து வந்த ரம்யா கிருஷ்ணனின் இன்னோவா காரை கிழக்கு கடற்கரை சாலை ச்க்போஸ்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சரக்குகள் சிக்கின. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. எனவே வெளியூரில் மது வாங்கி சென்னைக்கு எடுத்துச்செல்வது கடத்தலாகக் கருதப்படும் எனப்போலீஸார் விளக்கியதும் ரம்யா கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். கார் கானாத்தூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

பின்னர் காரை ரம்யா கிருஷ்ணனே ஓட்டி சென்னை திரும்பினார். சென்னையை சீல் வைக்கப்போகிறார்கள் என்கிற வதந்தியால் பிரபலங்கள் அவசரமாக வெளியூர்களில் இருந்து வண்டி வண்டியாக சரக்கு வாங்கி வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.