*  ஒரு காலத்தில் ஆக்‌ஷன் கிங்காக பட்டையை கிளப்பிய அர்ஜூனும், அழகு மன்னனாக பட்டாஸ் கிளப்பிய அர்விந்த்சாமியும் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ளனர். இருவரும் நல்ல கேரக்டர்கள் வேண்டும், அது வில்லனாக இருந்தாலும் ஓ.கே. என்கின்றனர். அதில் அர்ஜூனோ ‘கார்ப்பரேட் வில்லன் கேரக்டர்னா ஓ.கே.’ என்கிறார். ஆனால் அர்விந்த்சாமியோ எவ்வளவு க்ரிமினல்தனமாக வேண்டுமானாலும் இறங்கியடிக்க ரெடியாம். 

*  சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என்று மூன்று மாஜி மற்றும் சமகால ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் மீனாவுக்குதான் ஓவர் முக்கியத்துவமாகவும், அழகு காட்சிகளுமாக தரப்படுவதாக குஷ்புவுக்கு கடுப்பு என்று யூனிட்டினுள் ஒரு தகவல். 
ரஜினிக்கு தெரிந்தேதான் இப்படி மீனாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று குஷ் வருந்துகிறாராம். இதற்கு பதில் சொல்லும் யூனிட் நபர்கள் ‘என்ன பண்றது, எப்படி பார்த்தாலும் சின்ன குழந்தையில இருந்து ரஜினி சார் தூக்கி வளர்த்த பொண்ணாச்சே மீனா’ என்கிறார்கள் சிரித்தபடி. 

*  ராமராஜன், கனகா நடிக்க, இளையராஜாவின் தாறுமாறான ஹிட் இசையில், கங்கைஅமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ படத்தின் செகண்ட் பார்ட்டை எடுக்க பெரும் முயற்சி இடையில் நடந்தது. ராமராஜன், கனகாவை சீனியர்களாக வைத்துவிட்டு ஏதோ ஒரு இளம் ஜோடியை ஹீரோ ஹீரோயின்களாக்களாம் என்று கங்கை நினைத்தாராம். நடிக்க ஆர்வமில்லாத கனகா கூட ஒரு நன்றிக்கடனுக்காக மேக் - அப் போட ரெடியாம். ஆனால் ராமராஜனோ ‘கரகாட்டக்காரன் அப்படின்னா நான் தான். நான் ஹீரோவா பண்ணினால்தான் எடுபடும். பேசாம அந்த இளம் ஹீரோயினை எனக்கு ஜோடியாக்கிடுங்க. சீனியர் ராமராஜன் - கனகாவின் மகனாக இளம் ஹீரோவாகவும் டபுள் ரோல் பண்ணிடுறேன்’ என்கிறாராம். 
இதைக் கேட்டு கங்கை அமரன் கண்ணீர்விட்டுட்டாராம். 


*  நடிப்பில் அசுரனான அந்த இளம் ஹீரோவுடன்  கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் பட்டியலில் மிக முக்கியமானவர்கள் கந்தசாமி ஹீரோயின், கேரள மைனா என்று ஒரு பட்டியலுண்டு. அதிலும் மைனாவுடன் அண்ணன் ஓவர் ஈடுபாடகி, அது வீடு வரை பிரச்னையானதால்தான் ’நார்த் மெட்ராஸ்’ படத்திலிருந்து அவர் கழற்றிவிடப்பட்டார். இந்த நிலையில் அவரை பிரிந்த சூரன் நடிகர் இப்போது மீண்டும் கந்தசாமி ஹீரோயினுடன் ஐக்கியமாகிறாராம். சமீபத்தில் திருமணமாகி வெளிநாட்டில் தனிக்குடித்தனம் இருந்துவிட்டு மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்ப துடிக்கும் அவரும் கிட்டத்தட்ட அண்ணனுடன் சீசன் -2 வுக்கு ரெடியாகிவிட்டார்.