Asianet News TamilAsianet News Tamil

சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்...சூர்யாவின் ‘என்.கே.ஜி’யில் யாருக்கு முக்கியத்துவம்?

’செல்வராகவன் படத்தில் நடித்ததே ஒரு பெருமை என்கிற போது என்னைவிட படத்தில் சாய்பல்லவியின் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும் நான் கவலைப்படப்போவதில்லை’ என்கிறார் ரகுல் பிரீத் சிங்.

 

actress rakul preeth singh interview
Author
Chennai, First Published May 26, 2019, 12:53 PM IST

’செல்வராகவன் படத்தில் நடித்ததே ஒரு பெருமை என்கிற போது என்னைவிட படத்தில் சாய்பல்லவியின் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும் நான் கவலைப்படப்போவதில்லை’ என்கிறார் ரகுல் பிரீத் சிங்.actress rakul preeth singh interview

சூர்யாவின் என்.ஜி.கே வரும் 31ம் தேதி ரிலீஸ் என்கிற படத்தில் நடித்திருக்கிற இரு ஹீரோயின்களில் யாருக்கு முக்கியத்துவம் உள்ளது என்கிற கேள்விக்கு பதிலளித்த ரகுல்,’இந்த சந்தேகத்தை படம் தொடங்கிய நாளிலிருந்தே கேட்டுவருகிறார்கள். அது பற்றி நான் யோசிக்கவே இல்லை. செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர்.ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார்.அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.

பாடல் காட்சிகள் என்றால் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.படப்பிடிப்புத் தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.அதேபோல், 3 நொடி விதி என்று ஒன்றை வைத்திருக்கிறார். நடிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், எடிட்டிங் செய்யும்போது காட்சி தெளிவாக வருவதற்கு ஒருவர் வசனம் பேசி முடித்ததும், மற்றொருவர் உடனே ஆரம்பிக்கக் கூடாது. 3 நொடிகள் தாமதித்துத்தான் ஆரம்பிக்க வேண்டும்,actress rakul preeth singh interview

ஒருவேளை அதை மறந்து விட்டு நடிக்க ஆரம்பித்தால், ‘கட்’ சொல்லி திரும்ப ஆரம்பிக்கச் சொல்வார். எத்தனை முறை ‘டேக்’ வாங்குகிறோம் என்று கணக்கு தெரியாது. முகத்தில் மட்டுமல்ல, உடலிலும் அந்த கதாபாத்திரம் வரும் வரை விடமாட்டார்.இப்படத்தில் வரும் ‘அன்பே பேரன்பே’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.பொதுவாக நான் நடித்த படங்களை படம் வெளியாகும் நாளில் திரையங்கத்திற்குச் சென்று தான் பார்ப்பேன். இப்படத்தையும் மே 31 அன்று மும்பையில் தான் பார்ப்பேன்’ என்று டாபிக்கை வேறு ஒரு திசைக்கு டைவர்ட் பண்ணிப் பேசுகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

Follow Us:
Download App:
  • android
  • ios