மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார் பிரேமா காதல்" என்ற படத்தில் நடித்தார். அதில் முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என ஹரிஷ் கல்யாணுடன் மிகவும் நெருக்கமாக நடித்தார். 

அந்தப் படம் ஹிட்டானதைத் தொடர்ந்து ரைசா, தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். "அலைஸ்", "காதலிக்க" யாருமில்லை ஆகிய படங்களில் நடித்து வரும் ரைசா, நீச்சல் குளத்தில் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

 

பட வாய்ப்புகளை பிடிக்க ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது நடிகைகளின் வழக்கம் என்றாகிவிட்டது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் படுகவர்ச்சியாக ரைசா எடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

விதவிதமான மார்டன் உடைகளில் கலக்கல் போஸ் கொடுத்துள்ள ரைசா, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க ரொம்ப அழகு, சுத்திப்போடுங்க என புகழ்ந்து தள்ளியுள்ளனர். 

ஆனால் அடங்காத சில நெட்டிசன்களே, ரைசாவின் அதிரடி கவர்ச்சியை பார்த்து மோசமாக கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் ரைசா போட்ட பிளான் படி என்னவோ புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது.