இதுகுறித்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், சித்தி 2 தொடரின் படப்பிடிப்பு தொடர்கிறது. உடல் நலப் பிரச்னை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக, வேறு நடிகர்களை மாற்றி நடிக்க வைக்கிறோம்.

சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் சின்னத்திரையிலும் கால் பாதித்து, அசுர வளர்ச்சி அடையாளம் என்பதை நிரூபித்தவர் ராதிகா சரத்குமார். "கண்ணின் மணி கண்ணின் மணி" என தொடங்கும் பாடலும், சித்தி என ஒலிக்கும் சிறுமியின் செல்ல சினுங்களும் அனைவரது இல்லத்தையும் ஆக்கிரமித்தது. 1999 முதல் 2001ம் ஆண்டு வரை ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் தொலைக்காட்சி முன்பு காட்டி போட்டு வைத்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!

இந்நிலையில் 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சித்தி - 2 தொடர் ஒளிபரப்பானது.இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்தனர். இதையடுத்து அரசிடம் தங்களது தரப்பு பிரச்சனைகளை எடுத்துரைத்த சின்னத்திரை நிர்வாகிகள் படப்பிடிப்பிற்கான அனுமதியை பெற்றனர். இருப்பினும் 60 பேர் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும், கொரோனா கட்டுப்பாடுகள் என ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பு சில பிரச்சனைகளை சந்தித்தாலும் படப்பிடிப்பை நடத்த சம்மதித்துள்ளனர். 

ஆனால் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு தளத்திற்கு வர தயங்குகின்றனர். சிலரோ சொந்த ஊரில் இருந்து திரும்ப முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளனர். இதனால் பல சீரியல்களில் நடிகர், நடிகைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி சன் டி.வி.யில் அதிகம் பார்வையாளர்களை கவர்ந்த சித்தி 2 சீரியலிலும் நடிகர்களை மாற்றியுள்ளதாக ராதிகா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசன் உடலில் எங்கெல்லாம் டாட்டூ குத்தியிருக்காங்க தெரியுமா?... விளக்கத்துடன் கிளுகிளுப்பு கிளிக்ஸ்...!

இதுகுறித்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், சித்தி 2 தொடரின் படப்பிடிப்பு தொடர்கிறது. உடல் நலப் பிரச்னை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக, வேறு நடிகர்களை மாற்றி நடிக்க வைக்கிறோம். பாதுகாப்பு முக்கியம் என்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். விரைவில் சன் டிவியில் 'சித்தி 2 ஒளிபரப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் மொத்தம் 3 நடிகர்கள் மாறியுள்ளனர். அதில் குறிப்பாக ராதிகாவிற்கு ஜோடியாக நடித்த பொன்வண்ணனுக்கு பதிலாக நிழல்கள் ரவி உள்ளார். பொன்வண்ணன் இல்லாதது ரசிகர்களை சற்று அதிர்ச்சியடையச் செய்துள்ளது.