இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' படத்தில், சூப்பர் ஸ்டாரின் அன்பான மனைவியாக நடித்திருந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் நடித்த 'தோணி', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' ஆகிய படங்களில் புடவை கட்டி கொண்டு குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தாலும், பாலிவுட் திரையுலகில் பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். 

தான் நடிக்கும் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்ளும் இவர், தற்போது ஆங்கிலம் மற்றும் இரண்டு பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஓய்வு கிடைக்கும் போது தன்னுடைய கணவருடன் வெளிநாடுகளுக்கு சென்று அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சில நடிகைகள், தங்களுடைய கணவரின் பெயர்களை பச்சை குத்தி கொள்வது போல்... இவரும் தன்னுடைய கணவர் பெனிடிக்ட் டெய்லரின் முதல் எழுத்து 'B 'யை யாருக்கும் தெரியாத இடமான தொடையில் பச்சை குத்தி கொண்டுள்ளார். 

இது இவர் சமீபத்தில் எடுத்து கொண்ட ஒரு புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.