நடிப்பிற்காக தன்னை வருத்திக்கொள்ளும் நடிகர்களில், சில நடிகைகளும் உண்டு. அதில் குறிப்பாக பிரியங்கா ஜவால்கர் என்பவர், ‘டேக்ஸி வாலா’ என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்து உள்ளார்.இவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

இந்தப் படம் இம்மாதம் 16ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தருணத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சிக்காக தான் உண்மையில் மது அருந்தியதாகவும், அதாவது படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தான் மது அருந்திவிட்டு, படப்பிடிப்பு முடியும் வரை அந்த போதையை அப்படியே இருக்கும் படி பார்த்துக்கொள்வாராம்.

இதற்கிடையில் அந்த காட்சியின் நடுவே சிரிப்பது போல சில காட்சிகள் இடம் பெற்று உள்ளதாம்..போதையில் உள்ளது போன்று என்னதான் நடித்தாலும் அது இயற்கையாக அமைந்து விடாது என்பதற்காக, உண்மையிலேயே மது அருந்திவிட்டு நடித்துள்ளார் நடிகை பிரியங்கா ஜவால்கர்.

அன்றைய தினம் அவர் உண்மையில் மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.