actress priyamani turn to web seriyal
'பருத்திவீரன்' படத்தில் முத்தழகி கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து நடித்திருந்தவர் நடிகை பிரியாமணி. இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
'பருத்திவீரன்' படத்தை தொடர்ந்து மிகவும் பிஸியாக மாறிய இவர், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
பட வாய்ப்புகள் குறைந்த பின் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக மாறினார். தற்போதும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மேலும் கன்னடத்திலும் அதே போன்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். 
கடந்த ஆண்டு முஸ்தப்பா ராஜ் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட இவர், திருமணத்தை தொடர்ந்தும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். 
இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால். வெப் சீரிஸின் பக்கம் இவருடைய கவனம் திரும்பியுள்ளது. இவர் இவர் அடுத்ததாக ஹிந்தியில் உருவாகி வரும் 'தி பேமிலி மேன்' என்கிற வெப் சீரியலில் நடிக்க உள்ளார். புலனாய்வு கலந்த திரில்லர் கதையில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் தேசிய விருது பெற்ற நடிகர் மனோஜ் பாஜ்பாயும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி கதாநாயகியாக இருந்து தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி வெப்சீரியலுக்கு வரும் நிலை வந்து விட்டதா? என ரசிகர்கள் வருத்தமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
