Priya Bhavani Shankar : கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், முதன்முறையாக ஸ்கை டைவிங் செய்தது குறித்து தனது அனுபவத்தையும் வீடியோவில் பகிர்ந்துள்ளார். 

செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆன பிரியா பவானி சங்கர், கடந்த 2017-ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய் ஜோடியாக மாஃபியா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யானை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ஹிட்டானது. இதுதவிர தற்போது தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயின் என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். இவர் கைவசம் ராகவா லாரன்ஸின் ருத்ரன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், எஸ்.ஜே.சூர்யா உடன் பொம்மை, சிம்புவின் பத்து தல, கமல்ஹாசனின் இந்தியன் 2 என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யின் மகளா இது! மளமளவென வளர்ந்து ஹீரோயின் போல் ஜொலிக்கும் திவ்யா சாஷா -வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

View post on Instagram

தொடர்ந்து படங்களில் ஓய்வின்றி நடித்து வந்த இவர், தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். தனது காதலன் உடன் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா பவானி சங்கர், அங்கு ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள வீடியோ செம்ம வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ஸ்கை டைவிங் செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஹெலிகாப்டரில் பறந்தபடி நடுவானில் இருந்து குதித்தபோது எடுத்த வீடியோவை தான் பிரியா பதிவிட்டுள்ளார். முதன்முறையாக ஸ்கை டைவிங் செய்தது குறித்து தனது அனுபவத்தையும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். செம்ம தில்லாக ஸ்கை டைவிங் செய்த நடிகை பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ராஜா ராணி சீரியலில் இருந்து திடீர் என விலகும் வில்லி அர்ச்சனா..! அவருக்கு பதில் நடிக்க போவது யார் தெரியுமா?