Asianet News TamilAsianet News Tamil

ஆண் நண்பருடன் ஒட்டி, உரசியபடி... பைக்கில் ஊர் சுற்றிய பிரபல நடிகை... வைரலாகும் வீடியோ...!

இந்நிலையில் பிரபல புகைப்பட கலைஞரான ரோகன் ஸ்ரேஷ்தாவவிற்கும் ஷ்ரத்தா கபூருக்கும் இடையே காதல் என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

Actress Prabhas Saahoo Herine Shraddha Kapoor Enjoying Bike Ride With Her Boyfriend
Author
Chennai, First Published Jun 12, 2020, 7:30 PM IST

சாஹோ, பாகி 3 ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா கபூர்.  பாலிவுட்டில் 700 படங்களுக்கு மேல் நடித்த பிரபல வில்லன் நடிகர் சக்தி கபூர் மகள் ஆவார். பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஷ்ரத்தா கபூர், தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். 2010ஆம் ஆண்டு வெளியான டீன் பாட்டி படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், 2013ஆம் ஆண்டு வெளியான ஆஷிக்-2 படம் அவருக்கு பேசும் படியாக அமைந்தது. 

Actress Prabhas Saahoo Herine Shraddha Kapoor Enjoying Bike Ride With Her BoyfriendActress Prabhas Saahoo Herine Shraddha Kapoor Enjoying Bike Ride With Her Boyfriend

பாலிவுட் இளம் ஹீரோக்களே தங்களது படத்தில் ஷ்ரத்தா கபூர் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் ஷ்ரத்தா, தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு, அவ்வப்போது ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார்.  இந்நிலையில் பிரபல புகைப்பட கலைஞரான ரோகன் ஸ்ரேஷ்தாவவிற்கும் ஷ்ரத்தா கபூருக்கும் இடையே காதல் என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

Actress Prabhas Saahoo Herine Shraddha Kapoor Enjoying Bike Ride With Her Boyfriend

தற்போது மும்பையில் கொரோனா லாக்டவுனில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காதலர் ரோகனுடன் சேர்ந்து ஷ்ரத்தா இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கறுப்பு நிற டி-ஷர்ட், டிராக் உடன் மாஸ்க் அணிந்த படி காதலருடன் நெருக்கமாக அமர்ந்து கொண்டு பைக்கில் ஊர் சுற்றுகிறார். இருவரும் நெருக்கமாக பைக்கில் ஒட்டி, உரசிக்கொண்டு செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ.... 


 

Follow Us:
Download App:
  • android
  • ios