லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற, உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, 352 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம், இந்திய அணி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பிரபலங்கள் பலரும், இந்திய அணிக்கு சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் பிரபல நடிகை பூனம் பாண்டே, இந்திய அணி வெற்றி பெற்றதற்காக, மேலாடை இல்லாமல் எடுத்து கொண்ட, கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கருப்பு நிறத்தில் மிகவும் ட்ரான்ஸ்பெரென்ட் ஆடை அணிந்தபடி, புகைப்படம் வெளியிட்டு, இந்த புதிய புகைப்படம் இந்திய அணிக்காக என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.