பிரபல மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே பிரிட்டிஷ் தொழிலதிபரும், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா மற்றும் அவரது நண்பர் சவுரப் குஷ்வாஷ் மீது பரபரப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில்... கடந்த மார்ச் 2019 முதல், ராஜ் குந்த்ராவின் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட ஒரு செயலியை பூனம் பாண்டே நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த செயலி பயன்பாட்டின் ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், ஒப்பந்தம் முடிந்த பின்பும்...  இந்த செயலியில் பூனம் பாண்டேவின் பெயர் பயன்படுத்தப்பட்டு வருவதாக  இவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், ராஜ் குந்த்ரா பயன்பாட்டில் உள்ள அந்த செயலில் பூனமின் எண்ணை கசியவிட்டதாகவும், இதன் மூலம் தனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஆபாச செய்திகள் வருவதாக தன்னுடைய மனுவில் கூறியுள்ளார்.

இது குறித்து புகார் கொடுக்க பூனம் பாண்டே காவல் நிலையத்தை அணுகிய போது, அவருடைய புகார் ஏற்று கொள்ளப்படாததால், தற்போது பம்பாய் உயர்நீதிமன்றத்தை பூனம் அணுகியுள்ளதாக அவரின் வழக்கறிகர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருக்கும், அவருடைய நண்பருக்கும் தற்போது, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.