2000ம் ஆண்டு தமிழில் வெளியான “காதல் ரோஜாவே” என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா குமார். அமெரிக்காவில் வசித்து வரும் பூஜா குமார் தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவை விட்டு விலகி இருந்த பூஜா குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் ஹாசனின்  “விஸ்வரூபம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் “உத்தம வில்லன்”, “விஸ்வரூபம் 2” என அடுத்தடுத்து கமலுடன் ஜோடி போட்டு நடித்தார். 

ஹாலிவுட், பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் பூஜா குமார், சோசியல் மீடியாவில் படு பிசியாக வலம் வருகிறார். தற்போது ஃபோர்பிடன் லவ் என்ற வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். ஜீ5 நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரை அவார்டு வின்னிங் ஹிட் இயக்குநர்களான பிரியதர்ஷன், பிரதீப் சர்க்கார், மகேஷ் மஞ்சுரேக்கர், அனிருத்தா ராய் ஆகியோர் 4 தனித்தனி குட்டி கதையாக இயக்கியுள்ளனர். படத்தின் தலைப்பில் லவ்வை வைத்துக்கொண்டு ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றால் எப்படி, படுக்கையறை காட்சிகள் உட்பட பல ரொமாண்டிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

இந்த வெப் சீரிஸில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள அனாமிகா என்ற கதையில் பூஜா குமார் நடித்துள்ளார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாத வயதான பெண்மணிக்கும், இளைஞருக்கும் இடையேயான உணர்வுகளை பிரதிபலிக்கும் கதையாகும். இதில் பூஜா குமார் இளைஞர் உடன் படுக்கை அறையில் படு ரொமாண்டிக்காக இருக்கும் காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ...