நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆனால், தற்போது ஒளிப்பரப்பாகி வரும், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி, போர் அடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இதனால் கமல் நிகழ்சிக்கு வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில்  மட்டும் தான் டி.ஆர்.பி லெவல் எகிருவதாக நிகழ்ச்சியாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு, 'கடைகுட்டி சிங்கம்' படத்தின் பிரோமோஷனுக்காக, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர் நடிகர் கார்த்தி, சூரி, மற்றும் இயக்குனர் பாண்டிராஜ். 

இதே போல் விரைவில் வெளியாக உள்ள கமல்ஹாசன் இயக்கி, நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் பிரோமோஷனுக்கு  படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தெரிகிறது.

அதனை உறுதி படுத்தும் வகையில் இந்த படத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை பூஜா குமார், பிக்பாஸ் வீட்டின் அருகே எடுத்து கொண்டு புகைப்படம் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த படத்தின் இயக்குனராகவும், நடிகராகவும், பிக்பாஸ் வீட்டிற்குள் நேரடியாக  கமல் போட்டியாளர்களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.