- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தங்கமயிலின் தில்லாலங்கடி வேலை: மீனா, ராஜீயை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் கோமதி; உடைக்கப்படுமா உண்மை?
தங்கமயிலின் தில்லாலங்கடி வேலை: மீனா, ராஜீயை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் கோமதி; உடைக்கப்படுமா உண்மை?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் குடும்பத்தினர் இப்போது நிம்மதி இல்லாமல் தவித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Pandian Stores 2 Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 666ஆவது எபிசோடில் மீனா மற்றும் ராஜீ இருவர் மீதும் கோமதிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. யாரை நம்புவது, எதை நம்புவது என்றே தெரியாமல் குழப்ப நிலையில் இருக்கிறார். என்ன நடந்து என்று முழுவதுமாக பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் தங்கமயில் குடும்பம் எவ்வளவு பெரிய பிராடு குடும்பம் என்று கூறி முத்துவேல் தனது தங்கை கணவரான பாண்டியனை அவமானப்படுத்தினார். அதோடு மட்டுமின்றி தங்கமயிலின் அம்மா பாக்கியம் இந்த பிரச்சனையை சும்மாவே விடமாட்டார். இனி பாண்டியன் மன நிம்மதி இல்லாமல் கஷ்டப்பட போகிறான் என்று முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் பேசிக் கொண்டனர்.
Pandian Stores 2 Thangamayil Drama
இந்த நிலையில் தான் இன்றைய 666ஆவது எபிசோடானது அரசி மற்றும் சரவணன் தொடர்பான காட்சிகளுடன் தொடங்கியது. இதில் உன்னை பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து அரசி மற்றும் செந்தில் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பானது. இதில், அரசி அண்ணே, என்னால் தான் பிரச்சனை ஆரம்பிச்சது. அதன் பிறகு ஒவ்வொரு பிரச்சனையாக வந்து இப்போது அண்ணன் நிம்மதி இல்லாமல் கஷ்டப்படுகிறான். அண்ணனை பார்க்கவே ரொம்பவே கஷ்டமாக இருக்கு.
நாம் எல்லோரும் சந்தோஷமாக இருந்தோம். முதலில் நான் பிரச்சனையை ஆரம்பித்து வைத்தேன். அதன் பிறகு தினமும் எதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. என்னா, எல்லோரும் அழுதாங்க, அதன் பிறகு நீ வீட்டைவிட்டு போனதால் எல்லோரும் அழுதாங்க. அடுத்து பழனிவேல் மாமா கடை திறந்துட்டாரு என்று சொன்னாங்க. இப்போது அண்ணனோட வாழ்க்கை இப்படியாகிவிட்டது என்று எல்லோரும் அலறாங்க.
Gomathi Suspects Meena and Raji
அண்ணே நீ விட்டை விட்டு போகாத, இங்கேயே இரு என்று கூறி கதறி அழுதார். செந்திலும் தனது வீட்டிற்கு போகவில்லை என்று அரசிக்கு ஆறுதல் கூறினார். அதே போன்று மீனாவிடமும் இங்கே இருக்கலாம் என்றார். வீடே துக்கத்தில் இருக்கும் போது தனியாக சென்று என்ன பண்ணப் போகிறோம் என்று மன வலியோடு பேசினார். பின்னர் செந்தில் மற்றும் பழனிவேல் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பானது. இதில் இருவரும் தங்களது கவலைகளை சொல்லி ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர்.
தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் கதிர் தனது மாமா பழனிவேலுவிடம் கூறினார். அடுத்த காட்சியாக தங்கமயில் குடும்பம் காண்பிக்கப்பட்டது. இதில் தங்கமயில் இப்போது தான் ஞான உதயம் பிறந்தது போன்று பேசினார். நான் என்னுடைய வீட்டிற்கு போகணும் என்று அழுதுகொண்டே பேசினார். எனக்கு சாப்பாடு வேண்டாம், பசிக்கவில்லை. அம்மா சொன்னதை மட்டும் தான் இத்தனை நாட்களாக கேட்டேன். உன்னுடைய பேச்சை கேட்டு கேட்டு தான் இந்த நிலையில் இருக்கிறேன்.
Pandian Stores 2 Latest Promo
எனக்கு அந்த கல்யாணம் நடக்கவில்லை என்றால் இந்த உலகமே அழிந்துவிடுவது போன்று பேசி இப்போது இந்த நிலையில் உட்கார வச்சிருக்கிற, நானும் பொய் சொல்ல வேண்டாம் என்று படிச்சு படிச்சு சொன்னேன். நீ கேட்கவில்லை. எனக்கு திறமை பத்தவில்லை. சொன்ன பொய்ய காப்பாற்ற தெரியவில்லை. இப்போது என்ன செய்ய போற, உன்னுடைய சொந்தக்காரர்கள் என்ன செய்வாங்க, என்ன சொல்வாங்க என்று கூறி கதறி அழுதார்.
என்னுடைய புருஷனை எப்படி கைக்குள்ளபோட்டு வைக்க முடியும். அப்பாவை அண்டாவை தூக்கி அடிக்க போனார் என்று கூறி கதறி அழுதார். இதற்கு பாக்கியமோ இன்னும் 2 நாட்களில் அந்த குடும்பத்தோடு சேர்த்து வைக்கிறேன். அவர்களே வந்து மன்னிப்பு கேட்டு உன்னை வந்து கூட்டிக்கொண்டு செல்வார்கள் என்றார். அதற்கு மயில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அம்மா, அப்பா பேச்சைக்கேட்டால் நல்லா இருக்கலாம் என்று சொல்வார்கள். அது நல்ல அம்மா, அப்பாவிற்கு தான். இவர்கள் பேச்சைக்கேட்டால் நம்ம வாழ்க்கை இப்படித்தான் போகும்.
Tamil Serial Pandian Stores 2 Update
நம்முடைய குடும்பம் தெரிந்து நிலைமை தெரிந்து எவன் ஒருவன் வருகிறானோ அவனை திருமணம் செய்து கொள் என்று தங்கைக்கு அட்வைஸ் செய்தார். இறுதியாக கோமதி, மீனா மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பானது. இதில் நீங்கள் ஏதெனும் பொய் சொல்லியிருக்கிறீர்களா என்று கேட்டார். மயில் மாதிரி நீங்களும் ஏதேனும் பொய் சொல்லியிருக்கிறீர்களா? ராஜீ நீ நிஜமா காலேஜ் படிக்கிறயா? மீனா நீ நிஜமா கவுர்மண்ட் வேலை தான் பாக்குறயா என்று கேட்டார். என்னால், யாரை நம்ப வேண்டும் என்றே தெரியவில்லை. கூடவே இருந்து எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கிறார்கள் என்று பார் என்று கூறுவதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி அடுத்து நாளைய 667 எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.