Asianet News TamilAsianet News Tamil

Pooja Hegde: சரக்கை மோந்து பார்த்ததிலேயே போதையாடுச்சா? வெறித்தனமாக ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டேவின் வைரல் வீடியோ!

'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே (Beast Movie Actress) பாக்காகவே சரக்கை மிக்ஸ் செய்து விட்டு, அதனை குடிப்பதற்கு முன்பே குட்டையான கவர்ச்சி உடையில் வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

actress pooja hegde Pour it stir it and dance video viral in instagram
Author
Chennai, First Published Nov 26, 2021, 5:50 PM IST

பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே பாக்காகவே சரக்கை மிக்ஸ் செய்து விட்டு, அதனை குடிப்பதற்கு முன்பே குட்டையான கவர்ச்சி உடையில் வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் நடித்த 'முகமூடி' படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட்  படத்தில் தளபதி விஜய்க்கு ஹீரோயினாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.  தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக மாறிய பின்னர் தற்போது தான் தமிழ் பட வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. மற்ற சில  தமிழ் படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வரும் போதிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படு பிசியாக இருப்பதால் பட வாய்ப்புகளை ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

actress pooja hegde Pour it stir it and dance video viral in instagram

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக புதிய புதிய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் எங்கு சென்றாலும் அங்கு எடுக்கும் விதவிதமான புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

actress pooja hegde Pour it stir it and dance video viral in instagram

சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு சென்று வந்த பூஜா ஹெக்டே... விதவிதமான பிகினி உடையில் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். திரையில் கூட காட்டாத கவர்ச்சியை, மாலத்தீவில் கட்டவிழ்த்து விட்ட இவரது புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்தது.

actress pooja hegde Pour it stir it and dance video viral in instagram

இதை தொடர்ந்து தற்போது பிரபல நிறுவனத்தின் மதுவை பக்காவாக ஒரு கிளாசில் மிக்ஸ் செய்து, வைத்து விட்டு அதனை குடிக்காமலேயே வெறித்தனமாக சிவப்பு நிற கவர்ச்சி உடையில் குதூகல ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட... ரசிகர்கள் பலர் என்ஜாய் பண்ணுங்கள் என்றும், சரக்கு அடிக்காமலேயே போதை ஆகிவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோ வைரலாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios