இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான, 'முகமூடி' படத்தில், நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பூஜை ஹேக்டே. இந்த படம் தோல்வியை தழுவியதால், இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். இந்நிலையில் இவர், நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ள 'அருவா ' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ள, நடிகை பூஜா... 'ஹெலோ ஹெலோ நான் தமிழ் படங்களில் நடிக்க முடிவெடுத்து விட்டேன் என்கிற முடிவிற்கு செல்லவேண்டாம். நான் இதுவரை தமிழ் படத்தில் நடிக்க கையெழுத்து இடவில்லை . இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த வருடம் தமிழ் படத்தில் நடிப்பேன் என எதிர்பார்ப்பதாகவும் பூஜா கூறியுள்ளார்.

இதில் இருந்து, நடிகை பூஜா ஹெக்டே 'அருவா' படத்தில் கமிட் ஆனதாக வந்த தகவலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். அதே போல் ரசிகர்கள் தகவல் உறுதியாகும் முன் அவரசப்படவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

Scroll to load tweet…