நடிகை பூஜா ராமச்சந்திரன், வீடியோ ஜாக்கியாக சின்னத்திரையில் தன்னுடைய பணியை துவங்கி, மாடல், நடிகை, என திறமையை மெருகேற்றிகொண்டவர்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக நடிக்கமுடியவில்லை என்றாலும், 'பீட்சா',  'களம்', 'காதலில் சொதப்புவது எப்படி',  'காஞ்சனா 2 ' போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானார்.தமிழை தவிர தெலுங்கிலும், முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.  மேலும் தற்போது இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள,  'அந்தகாரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூஜா நடித்துள்ளார்.

ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே. கேரிக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து 2017 -ல் விவாகரத்து பெற்றார். 

இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின், இருவருமே தங்களுடைய வொர்க் அவுட்  மற்றும் சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வந்தனர்.


இந்நிலையில், பூஜா மற்றும் ஜான் இருவரும் தங்களுடைய முதல் திருமண வருட கொண்டாட்டத்தை நேற்று கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். லாக் டவுனில் இவர்களுடைய திருமணம் கொண்டாட்டம் நடைபெற்றாலும், இதனை கிளுகிளுப்பாக்கும் வகையில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய முதல் திருமண வருடத்தை நடிகை பூஜா தெரிவித்துள்ளார். 

இதை தொடர்ந்து இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பூஜா வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.