actress parvathi about her experiance
நடிகர் ஸ்ரீகாந்த்க்கு ஜோடியாக நடித்த பூ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் கொடுத்தவர் பார்வதி, இந்த படத்தை தொடர்ந்து தனுஷுடன் மரியான், பெங்களூர் டேஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பல நடிகைகள், பாவனாவின் பாலியல் வன்முறைக்கு பின் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையில் நடந்த அசம்பாவிதங்களை கூறிவருகின்றனர்.
அதே போல் நடிகை பார்வதியும் அவருடைய வாழ்வில் நடந்த சில சம்பவங்களை கூறியுள்ளார். அவர் கூறுகையில் சினிமா துறையில் வழக்கமாக நடிகைகளை எப்படி நடத்துவார்கள் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மை என பார்வதி கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டியில், "பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைப்பார்கள். மலையாள சினிமாவில் நான் இதை பல முறை சந்தித்துள்ளேன். பல சீனியர் நடிகர்கள், இயக்குனர்கள் நேரடியாகவே கேட்பார்கள்.
சினிமா என்றால் அப்படி தான் இருக்கும் என சிலர் ப்ஃரீஅட்வைஸ் செய்து என்னை அழைப்பார்கள்."
"அப்படி பட்டவர்களின் படங்களை நான் நிராகரித்துள்ளேன். அப்படி செய்துதான் படவாய்ப்பு பெறவேண்டும் என்றால் அது வேண்டாம். நடிப்பதை தவிர வேறு வேலை செய்யமுடியாதா என்ன?. அதிக வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததற்கு அதுதான் காரணம்" என கண்களில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
