தமிழ் சினிமாவில் 80 களில், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோருடன் நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை பானு பிரியா. தமிழ் மொழி மற்றும் இன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். 

திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டில் ஆன இவர், பின் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்னையில் வந்து செட்டில் ஆனார். 

சின்னத்திரை மூலம் மீண்டும் திரையுலகிற்கு ரீ- என்ட்ரி கொடுத்த இவர், தற்போது ஒரு சில படங்களில் , அம்மா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆந்திர போலீசாரிடம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் அளித்துள்ள புகாரில் "சென்னையில் உள்ள பிரபல நடிகை பானுபிரியாவின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக தன்னுடைய 14 வயது மகள் வேலை பார்த்து வருவதாகவும், அவருக்கு சம்பளம் கொடுக்காமல் அடிமைபோல நடத்தி, பானுபிரியா கொடுமைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். 

மேலும் தனது மகளை சந்திக்கவும் பானுபிரியா அனுமதிக்கவில்லை என்று அந்த சிறுமியின் தாயார் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள ஆந்திர போலீசார் விரைவில் சென்னை வந்து பானுபிரியாவிடம் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.