தனது பிறந்தநாளை  மறக்க முடியாத நாளாக மாற்றிய ரசிகர்களுக்காக மேலும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஓவியா. 

களவாணி, கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா களம் இறங்கினார். யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. 

முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான். அந்த நிகழ்ச்சி மூலம் பெரும் புகழ் கிடைத்தாலும், அதன் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஓவியாவிற்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ஆனால் இன்றுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே தி பெஸ்ட் என்ற பெயர் எடுத்தவர் ஓவியா மட்டும் தான். 

இதையும் படிங்க: இதுல முத்தம் வேற... டாப் ஆங்கிளில் அப்பட்டமாக முன்னழகை காட்டிய மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஓவியா நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். கேரளத்து பைங்கிளியாக இருந்தாலும் ஓவியாவிற்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். நடிகை ஓவியாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #HappyBirthdayOviya என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ஓவியா ஆர்மி தெறிக்கவிட்டனர். 

Scroll to load tweet…

அதற்கு நன்றி தெரிவித்து நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது பிறந்த நாள் கேக்கை தானே பேக் செய்ததாக தெரிவித்துள்ள ஓவியா, தனிமையில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களையும் அத்துடன் பதிவிட்டுள்ளார். 

View post on Instagram

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

தனது பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய ரசிகர்களுக்காக மேலும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஓவியா. அதாவது தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஓவியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை பதிவிட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர்.