2019ம் ஆண்டின் முதல் கல்யாண ஜோடி என்கிற பெருமையை ஓவியா, ஆரவ் ஜோடி தட்டிச்சென்றாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை என்கிற அளவுக்கு அவர்களின் காதல் முற்றி புத்தாண்டும் அதுவுமாய் கடைத்தெருவுக்கே வந்துவிட்டது.

விஜய் டி.வியின் ‘பிக்பாஸ்’ சீசன் ஒன்றில் ஒன்றுகூடி நண்பர்களாகி, காதலர்களாகி கசிந்துருகிப் பிரிந்தவர்கள் ஓவியாவும் ஆரவும். சொல்லப்போனால் ஓவியாவால் தான் ஆரவும் பிரபலமடைந்தார் என்பது தான் உண்மை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா ஜோடி தான் பிக்பாஸ்  வீட்டின் லைம் லைட்டாக இருந்து வந்தனர்.ஆரவ்விடம் காதல் வலையில் விழுந்த ஓவியா, ஆரவ் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்ததும் மிகவும் நொந்து போனார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஆரவ் மற்றும் ஓவியாவின் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இருவரும் சேர்ந்து ஊர் சுற்றிய வீடியோ சில மாதங்களுக்கு சேர்ந்து சமூக வலைதளத்தில் உலா வந்தது. அதே போல தனது பிறந்தநாளை கூட ஆரவ்வுடன் தான் கொண்டாடினார் ஓவியா.

 இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். ஆரவ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் “இப்போது இந்த வருடம் அமைதியாக முடியும் என நம்புகிறேன்” என கூறி லவ் ஸ்மைலி பதிவிட்டுள்ளார். மேலும் #Araviya என இரண்டு பேரின் பெயரையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் காதல் இன்னும் இருக்கிறது என்று வலைதளவாசிகள் உறுதிபடுத்தி வருகின்றனர்.

இந்தக் காதலை இனியும் இப்படியே வளர்த்துக்கொண்டுபோக முடியாது என்பதால் இருவரும் மிகவிரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாவும்,அடுத்து ஹனிமூன் செல்லவேண்டிய இடம் கூட முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும்,  2019ன் முதல் நட்சத்திரத்திருமணம் இவர்களுடையதாக இருக்க வாய்ப்புண்டு என்றும் சில தகவல்கள் நடமாடுகின்றன.