தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர், நடிகை நித்யா மேனன். கடைசியாக இவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த, 'சைக்கோ' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. படத்தின் கதாநாயகி, அதிதி ராய் நடிப்பை விட, நித்தியா மேனன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இவர், கொரோனா ஊரடங்கினாள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உதவும் நோக்கத்தில் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

நித்யா மேனன், சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதையும் தாண்டி பேஷன் ஷோக்கலில் கலந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் பிரமாண்ட ஃபேஷன் ஷோக்களில் பயன்படுத்திய ஆடம்பர உடைகளையும், திரைப்படங்களில் பயன்படுத்திய விலைமதிப்புள்ள உடைகளையும் ஏலம் விட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையும் கொரோனா ஊரடங்கினாள் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகிறது.