பொள்ளாச்சியில் 100 க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கயவர்களுக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை நிலானியும், கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, போலீஸ் உடையில், காவல் துறையினர் பற்றி அவதுாறாக பேசி பிரபலமானவர் 'டிவி' நடிகை நிலானி. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இவரை கைது  செய்தனர்.

இதை தொடர்ந்து, இவர் திருவண்ணாமலையை சேர்ந்த உதவி இயக்குநரான காந்தி லலித் குமாரும் காதலித்து பின் திருமணம் செய்ய மறுக்கவே, மனமுடைந்த லலித்குமார், கடந்த வருடம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பின் நிலானியும் தற்கொலைக்கு முயன்றார் இந்த சம்பவம் சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது இவர் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ இதோ:

"