சசிக்குமார் நடிப்பில் வெளியான “வெற்றிவேல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மலையாள நடிகை நிகிலா விமல். இதையடுத்து பிரசாத் இயக்கிய “கிடாரி” படத்திலும் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். சமீபத்தில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா அக்கா, தம்பியாக நடித்த “தம்பி” படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். “தம்பி” படம் நிகிலா விமலுக்கு  நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவுவதை குறைக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கேரள மாநிலம்  ஓய்வு பெற்ற மருத்துவர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நிகிலா விமல், தற்போது ஷூட்டிங் ஏதும் இல்லாததால் தனது சொந்த மாநிலத்தில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். ஊரடங்கு காரணமாக கிடைத்த இந்த பொன்னான நேரத்தை மக்களுக்கு சேவை புரியும் விதமாக செலவழிக்க முடிவெடுத்தார். கேரள மாநிலம் கண்ணூரில் ஊரடங்கு சமயத்தில் மக்களுக்கு உதவும் விதமாக கால் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிய தன்னார்வலர்கள் தேவை என விளம்பர செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பிரபல டி.வி. தொகுப்பாளினி மீது வீடு புகுந்து தாக்குதல்... கொரோனா ஊரடங்கில் ஏற்பட்ட பரிதாபம்...!

இதையடுத்து கண்ணூர் கால் சென்டரில் பணிக்கு சேர்ந்த நிகிலா விமல், மக்களுக்கு உதவி வருகிறார். மேலும் இப்படிப்பட்ட இக்காட்டான நேரத்தில் மக்களுக்கு உதவுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா நிவாரணத்திற்காக கோடிகளில் சம்பளம் வாங்கும் பல நடிகைகள் ஒரு ரூபாய் கூட கொடுக்காதது விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்த தருணத்தில் நடிகை நிகிலா விமல் களத்தில் இறங்கி சேவையாற்ற துணிந்திருப்பது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.