அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் இந்த டிசம்பரில் நயன்தாரா சர்வ நிச்சயமாகத் திருமணம் செய்துகொள்ளமாட்டார் என்று அவரது உதவியாளர்கள் வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலர் விக்னேஷ் சிவன் வீட்டுக்கு நயன் தாரா விசிட் அடித்த சமயத்திலிருந்தே அவர் இந்த வருடம் கிறிஸ்மஸ் சமயத்தில் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வார் என்று நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அச்செய்திகளை சிவனோ, நயனோ எந்த சந்தர்ப்பத்திலும் மறுக்கவில்லை. மாறாக இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற சொந்தக் கம்பெனி துவங்கி ‘நெற்றிக்கண்’என்ற படத்தை ஆரம்பித்தனர். அடுத்து ஒன்றாக திருப்பதி போய் கிச்கிசு செய்தியாளர்களை இன்னும் உற்சாகப்படுத்தினர்.

ஆனால் நாட்கள் நகர்கின்றனவே தவிர, திருமண பந்தத்தை நோக்கிய எந்த முன்னெடுப்பையும் அவர்கள் எடுத்ததாகட் தெரியவில்லை. இடையில் ‘வலிமை’படத்தில் அஜீத்துடன் மீண்டும் நயன் ஜோடி சேரப்போகிறார் என்று செய்திகள் வந்தன. அது பற்றிய அடுத்த கட்டச் செய்திகள் ஊர்ஜிதமாகாத நிலையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’படத்தில் அதிகாரபூர்வமாக ஒப்பந்தமாகியிருக்கிறார் நயன். இப்படம் ‘நெற்றிக்கண்’முடிந்தவுடன் தொடங்கும் என்று தெரிகிறது. இது போக இன்னும் சில முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் நயன் தனது 2020 வருடத்துக்கான கால்ஷீட்டை ஜனவரியிலேயே நிரப்பிக்கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. எனவே மீடியா நண்பர்கள் நயன் விக்னேஷ் சிவன் திருமண தேதிகளை டிசம்பர் 2020க்கு ஷிஃப்ட் செய்துகொள்வது நாட்டுக்கு நல்லது.