வாழ்நாளின் அதிகபட்ச சம்பளம் பேசப்பட்ட ஷங்கர்,கமல் காம்பினேஷனின் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து ’மேலும் பேச்சுவார்த்தைகள் எதுவும் தேவையில்லை’ என்றபடி அதிருப்தியோடு வெளியேறினார் நடிகை நயன்தாரா.


வாழ்நாளின் அதிகபட்ச சம்பளம் பேசப்பட்ட ஷங்கர்,கமல் காம்பினேஷனின் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து ’மேலும் பேச்சுவார்த்தைகள் எதுவும் தேவையில்லை’ என்றபடி அதிருப்தியோடு வெளியேறினார் நடிகை நயன்தாரா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, அஜீத்தின் ‘விஸ்வாஸம்’ படத்தில் மட்டுமே வழக்கமான டம்மி ஹீரோயின் வேடத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அடுத்து பெரிய காம்பினேஷன், மிகப்பெரிய சம்பளம் என்ற இரண்டு காரணங்களுக்காக ‘இந்தியன் 2’ படத்திலும் நடிக்க சம்மதித்து கதையும் கேட்டு முடித்திருந்தார் நயன். கமலுக்கு 50 கோடி சம்பளம் ஒதுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு நயன் 5 கோடி கேட்டிருந்தார்.

ஷங்கரும், தயாரிப்பு தரப்பும் இப்பெரிய தொகைக்கு சம்மதித்திருந்த நிலையில், நயன்தாராவிடம் படத்திற்கு மொத்தம் 110 நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டிருந்தது. இதற்கும் சம்மதம் தெரிவித்திருந்த நயன், அது எந்த 110 நாட்கள் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும் என்று கேட்க அதற்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்தோ, இயக்குநர் தரப்பிலிருந்தோ சரியான பதில் இல்லை.

ஏனெனில் முதல் ஷெட்யூலுக்கு அடுத்து எப்போது படப்பிடிப்பு வைத்துகொள்ளலாம் என்பதை தமிழக இடைத்தேர்தலுக்குப் பின்னர்தான் சொல்லமுடியும் என்று கமல் கறாராகத் தெரிவித்திருக்கிறார். அப்படி கமலுக்காக காத்திருந்தால் தான் வரிசையாக படங்களை இழக்கவேண்டிவரும் என்று முடிவெடுத்த நயன்,’ நல்லவேளை நான் கைநீட்டி அட்வான்ஸ் வாங்கலை. இத்தோட ஆளை விடுங்க’ என்றபடி ‘இந்தியன்2’விலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாராம்.