Actress Nayanthara and Samantha are the heroines of the remake of super hit ...
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கின் தமிழில் நடிகை நயன்தாராவும், தெலுங்கில் நடிகை சமந்தாவும் நடிக்க இருக்கின்றனர்.
பவன் குமார் இயக்கத்தில் கடந்தாண்டு கன்னடத்தில் வெளியான சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படம் "யு டர்ன்".
இதில், விக்ரம் வேதா மற்றும் ரிச்சி ஆகிய படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சூப்பட் ஹிட்டான இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை "சத்யா" பட புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள இதில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்கயிருக்கிறாராம்.
விரைவில் இப்படமும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படும் என்றும், அதில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
