தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். இவர் நடித்த ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல படங்கள் நல்ல வெற்றியை தந்தது. 

இதற்கிடையில், பின்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா, திருமணத்திற்கு பிறகு மீண்டும் தற்போது நடிக்க முடிவு எடுத்து உள்ளார்.

இந்த நிலையில், கடந்த வாரம் நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில், தான் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக பதிவு செய்து உள்ளார். நடிகை நஸ்ரியாவிற்கு தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என அதிக  ஆசை என பலமுறை கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது ஒரு பக்கம் இருக்க, அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கான வேலைகள் மும்முரமாக நடத்து வருகிறது. இதில் நஸ்ரியா நடிப்பதர்கான வாய்ப்பு அதிகமாக  உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அஜித்துடன் நஸ்ரியா நடித்தால், நஸ்ரியாவிற்கு இது நல்ல  என்ட்ரியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.