பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று வேளச்சேரியில் உள்ள அவருடைய வீட்டில் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

74 வயதாகும் நாஞ்சில் நளினி, கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். எனவே சீரியல் மற்றும் படவாய்ப்புகள் வந்தும், நடிப்பதில் இருந்து விலகினார்.

திரையுலகில் கிட்ட தட்ட 60 ஆண்டு காலமாக தன்னுடைய நடிப்பு பணியை மிகவும் அர்ப்பணிப்போடு செய்துவந்தனர் நாஞ்சில் நளினி.  இவர் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'எங்க ஊரு ராஜா' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பை துவங்கியவர்.

மேலும் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார். அண்ணன் ஒரு கோவில், தங்கப்பதக்கம், தீர்ப்பு, உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் பல்வேறு சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர்.

கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே உயிர் பிறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நடிகை நாஞ்சில் நளினியின் உடலுக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.