தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை நமீதா. இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருச்சியில் மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு குறைந்து போனது பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று  புகழ் பெற்றார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட வாய்ப்புகள் குவியும் என நினைத்த நமீதாவிற்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் வந்தால் அதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆண்டு, நமீதா அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தபோது, தன்னை பாஜக கட்சியில் இணைத்துக்கொண்டார். தற்போது மாநில செயற்குழு உறுப்பினாராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொறுப்பு கிடைத்ததும் சூறாவளியாக பணிகளை மேற்கொண்டு வருகிறார் நமீதா. அதன் படி இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனதா கட்சியின் மீனவர் அணி சார்பாக ஐஸ் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களுக்கு 370 கிலோ மீன் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நமீதா கலந்து கொண்டார்.  

 

இதையும் படிங்க: “இது சூர்யா, ஜோதிகா, சிவக்குமாரின் கூட்டுச்சதி”... மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

இந்த நிகழ்ச்சியில் நடிகை நமீதாவிடம் பல கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர். தமிழகத்தில் பாஜக உறுதியாக மலர்ந்தே தீரும் என நம்பிக்கை தெரிவித்த நமீதாவிடம், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்றும், தற்கொலை எண்ணத்தை கைவிட தியானம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். சூர்யாவின் நீட் தேர்வுக்கு எதிரான அறிக்கை குறித்து நமீதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மறுத்த நமீதா, இந்த கேள்வி வேண்டாம் என நழுவி விட்டார். சூர்யாவும் தன்னுடைய சினிமாத்துறையைச் சேர்ந்தவர் என்பதால் நமீதா இப்படி பதில் கூறாமல் சென்றுவிட்டார் என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.