80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த, நடிகை நதியா தற்போது, 'ரோஜா' என்கிற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார். 

1985  ஆம் ஆண்டு, தமிழில் 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நதியா. பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றே இவரை கூறாமல்.

இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் மற்ற நடிகைகளிடம் இருந்து சற்று வித்தியாசமாகவே காணப்பட்டதால். தற்போது வரை,  நதியாவின் பெயர் சொல்லும் அளவிற்கு பல பொருட்கள் பிரபலமாக இருக்கின்றன.

 

குறிப்பாக நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா கொண்டை, நதியா சைக்கிள் என பலரும் குறிப்பிட்டு ஒரு பொருளை வாங்கிவந்து உண்டு. 

1988 ஆம் ஆண்டு சிரீஸ் காட்போல், என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் தற்போது இவருக்கு இரண்டு சனம், ஜனா, என இரு மகள்கள் உள்ளனர்.  

நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் ஜெயம் ரவிக்கு அம்மாவாக எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி' என்கிற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையில் மட்டுமே ஜொலித்து வந்த நதியா, தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' என்கிற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளார். இவரின் வருகையை ஒட்டி, டிஆர்பியை பிடித்தே ஆக வேண்டும் என்கிற முயற்சியில் இந்த சீரியல் பீக் ஹார்ஸ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் முன்னணி நடிகை ஒருவர் இரட்டை வேடத்தில் நடித்து வந்த சீரியல் மற்றொரு நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.