actress mounirai commited akshaikumar moive

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாகினி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை மவுனிராய்.இந்த சீரியல் தமிழில் டப் ஆனதால் தமிழிலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்றதால் இவர் சல்மான் கானின் நெருங்கிய தோழியாகிவிட்டார் .இதனால் சல்மான் மவுனிராயை பல பாலிவுட் இயக்குநர்களுக்கு பரிந்துரை செய்து வருகிறாராம்.

ரஜினியின் வில்லன் அக்‌ஷய்குமாரின் 'கோல்டு' படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகமாக உள்ள மவுனிராயிக்கு இந்த படத்தில் மிகவும் அழுத்தமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

 மேலும் சல்மான் கானின் 'தபாங் 3'படத்திலும் இவர் நடிக்கிறார் .சல்மானின் பரிந்துரையால் இந்த படத்தில் மவுனி நடிப்பதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பறந்த மவுனிராயைப் பார்த்து ”உச் ”கொட்டுகின்றனர் சக நடிகைகள்.