அமைதியாக இருந்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேச தொடங்கியதும், தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் பரபரப்பு இன்னும் துளியும் குறையாமல் பத்தி எரிந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதுகுறித்து பல துறையை சேர்ந்த பிரபலங்களும் தங்களுடைய கருத்தை முன்வைத்து வருகின்றனர். பெரும்பாலும் பலரது கருத்து ஓபிஎஸ் திரும்பவும் முதல்வராக வர வேண்டும் என்பது போல் தான் உள்ளது.

ஆனால் , அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தான் முதல்வராக வர வேண்டும் என சிலர் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதில், முக்கியமானவர்கள் சி.ஆர் சரஸ்வதி, வளர்மதி, பொன்னையன், வைகைச்செல்வன் ஆகியோர்தான். ஆனால், மக்களுக்கு சசிகலாவை முதல்வராக்குவதில் சிறிதும் உடன்பாடில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல தொகுப்பாளினி, மற்றும் ஒரு சில திரைப்படங்கள், சீரியல்களில் நடித்து வரும் மோனிகா இவர்கள் பற்றி பேசி அவர்களுடைய முகத்திரையை கிழித்துள்ளார்.

 அவர் கூறுகையில் சசிகலா தான் முதல்வர் எனக் கூறிக் கொண்டு அலையும் சி.ஆர் சரஸ்வதி, வளர்மதி, பொன்னையன், வைகைச் செல்வன் ஆகியோரே அவர்கள் தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோற்றவர்கள் என்பது பலருக்கும் தெரியும்.

 இந்நிலையில், இவர்கள் கூறுவது சரியா மக்களே நீங்களே முடிவு எடுங்கள். என்று மிகவும் கோபமாக கூறியுள்ளார்.