actress meha akash about dhanush drawback

மறு வார்த்தை பேசாதே....மடி மீது நீ தூங்கிடு.. இந்த ஒரே பாட்டுதான்... இந்தப் பாட்டு மூலம் இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிறச் செய்தவர். அவர்கள் நெஞ்சில் சேர் போட்டு ஸ்டார்ங்காக உட்கார்ந்தவர் .

சில விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த மேகா ஆகாஷிற்கு ஜாக்பாட் அடித்த மாதிரி, கௌதம் வாசு தேவ் மேனன் இயக்கத்தில் தனுஷிற்கு ஜோடியாக என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் நடித்துள்ளார் . கூடுதலாக இவர் நடிப்பில் ஒரு பக்க கதை என்கிற படமும் ரிலிஸுக்காக காத்திருக்கிறது.

இந்த நிலையில் தனுஷ் பற்றி மனம் திறந்திருக்கிறார் மேகா. சமீபத்தில் ஒரு பேட்டியில் தனுஷ் குறித்து மேகாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது, தனுஷிடம் பிடிக்காதது என்று எதுவுமில்லை. அவர் மிகச்சிறந்த நடிகர். ஆனால் படப்பிடிப்பில் என்னை விட அமைதியாக இருப்பார் . பேசவே மாட்டார். இது ஒன்று தான் குறை என்றார்.