எஸ்.பி.பி சரண், இயக்குனர் வெங்கட் பிரபு நடித்த 'உன்னை சரணடைந்தேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன்.  இந்த படத்தை தொடர்ந்து, ‘ஜெர்ரி’, ‘கத்திக்கப்பல்’ , 'ஆட்டநாயகன்' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார்.

இவரால், தமிழ் திரையுலக ரசிகர்கள், மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடித்தார்.

இவர் நடித்துக் கொண்டிருக்கும்போதே, ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின்  மகன் விஷால், என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஒரு சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது.  இதை தொடர்ந்து ஜான் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண பந்தமும் நீடிக்காமல் விவாகரத்தில் முடிந்தது.

இதனால் தற்போது 8 வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன் வெளியான 'அரங்கமறு' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருவதால், மகளுடன் சென்னையிலேயே தங்கி முழுமையாக தமிழ் படங்களில் நடிக்க கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'பெண்' என்கிற சீரியலில் நடித்த இவருக்கு தற்போது சீரியல்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க பல வாய்ப்புகளும் தேடி வருகிறதாம்.