Meera Mithun: "பேய காணோம்" படப்பிடிப்பில் இருந்து நள்ளிரவில் திடீர் என 6 பேருடன் எஸ்கேப்பான நடிகை மீரா மிதுன்!

இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்க இரண்டு நாட்களே இருந்த நிலையில், 'பேய காணோம்' (Peya Kanoom) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மீரா மிதுன் (Meera Mithun), திடீர் என நள்ளிரவில் 6 பேருடன் எஸ்கேப் ஆன சம்பவம் குறித்து பேசி அதிர வைத்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர் அன்பரசன் (Anbarasan).

 

Actress Meera Mithun who suddenly escaped with 6 people at midnight from the shooting of Peya Kanom

இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்க இரண்டு நாட்களே இருந்த நிலையில், 'பேய காணோம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மீரா மிதுன், திடீர் என நள்ளிரவில் 6 பேருடன் எஸ்கேப் ஆன சம்பவம் குறித்து பேசி அதிர வைத்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர் அன்பரசன்.

குளோபல் எண்டர் டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில், தேனி பாரத் ஆர்.சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு "பேய காணோம்" என்று வித்தியாசமான தலைப்பை வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இவரை தவிர கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், ஜாக்குவார் தங்கம், ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர்,  செல்வகுமார், ஜெய் சங்கர், துரை ஆனந்த்,ரவி, விக்கி, ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர் தருண்கோபி  நடித்துள்ளார்.

Actress Meera Mithun who suddenly escaped with 6 people at midnight from the shooting of Peya Kanom

இப்படம் பற்றி இயக்குனர் செல்வ அன்பரசன் கூறியதாவது...

"வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட பேய் படம் இது.

Actress Meera Mithun who suddenly escaped with 6 people at midnight from the shooting of Peya Kanom

80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் இதர 20 சதவீதம்  படப்பிடிப்பு எடுக்க வேண்டி இருந்தது. அப்போது தான் நாயகி மீரா மிதுன் ஜெயிலில் இருந்து வந்தவுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கினோம். இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் கடந்த வாரம் நடத்த திட்டமிட்டு படக்குழுவுடன் கொடைக்கானல் சென்று படப்பிடிப்பை நடத்தினோம்.  மீரா மிதுன் மற்றும் இதர கலைஞகர்கள் நடிக்க படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுக்கொண்டிருந்தது.

படப்பிடிப்பு முழுவதும் முடிய இரண்டு நாட்களே இருந்த நிலையில், திடீரென நடிகை மீரா மிதுன் நள்ளிரவில் 6 பேர் கொண்ட குழுவுடன் தனது உடைமைகைளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். மறுநாள் காலையில் இயக்குனரிடம் மேனேஜர் விஷயத்தை சொல்ல, மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் மூழ்கினோம். பேயை தேட போன நாங்கள் கதாநாயகியை தேட வேண்டியதாகி விட்டது.
Actress Meera Mithun who suddenly escaped with 6 people at midnight from the shooting of Peya Kanom

எனது தயாரிப்பாளர் என்னிடம் வந்து தற்போது என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டவுடன்.. இத்தனை தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பை அவர் மதிக்காமல் சென்றுவிட்டார். அவர் இல்லை என்றாலும் பரவாயில்லை நான் காட்சிகளை வேறுவிதமாக எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, நம்மளைவிட மீராவை கூட்டிப்போன அந்த ஆறுபேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது என்று நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பை முடித்து இரவு 11.30  மணியளவில் பூசணிக்காய் உடைத்துவிட்டு படக்குழுவினருடன் சென்னை வந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

Actress Meera Mithun who suddenly escaped with 6 people at midnight from the shooting of Peya Kanom

இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் திரையரங்கில் இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இப்படத்திற்கு மிஸ்டர் கோளாறு என்பவர் இசையமைக்க, காதர் மஸ்தான் பின்னணி இசைப்பணிகளை கவனித்துள்ளார். ராஜ்.O.S, கௌபாஸு, பிரகாஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios