சூப்பர் மாடல் மீரா மிதுன் பப்லிசிட்டிக்காக தொடர்ந்து, விஜய், சூர்யா போன்ற அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகர்களை, விமர்சித்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீரா மிதுன் கஞ்சா அடிக்கும் வீடியோ வெளியாகி அவரை டோட்டல் டேமேஜ் செய்துள்ளது.

மேலும் செய்திகள்: குட்டி கிருஷ்ணனாக மாறிய சுஜா வருணி மகன்...! கொள்ளை அழகில் அத்வைத்!
 

இவருடைய பிரச்சனை என்னவென்றால், வாரிசு நடிகர்களாக உள்ளே வந்து முன்னணி நடிகர்களாக உயர்ந்து விட்டார்கள் என்பது தான். ஆனால் ஆரம்பத்தில் இவர்கள் பிரபலங்களின் மகன்கள் என்பதால் அறிமுகம் ஈசியாக கிடைத்திருந்தாலும், இந்த நிலைக்கு உயர அவர்கள் பட்ட கஷ்டத்தை முடிந்த வரை பலர் எடுத்து கூறியபோதும் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால் மீரா மிதுனை விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள், மோசமான வார்த்தைகளால் திட்டியதால், தன்னை அப்படி திட்டினாள் நானும் விஜய் மனைவி சங்கீதாவையும், சூர்யா மனைவி ஜோதிகாவையும் கீழ் தனமான வார்த்தைகளால் திட்டுவேன் என, ரசிகர்களுக்கே சவால் விடுத்தார். இப்படி பேசிய வீடியோவை தைரியமாக வெளியிட்டாலும், கமெண்டை ஆப் செய்து விட்டார். காரணம் அவருக்கே தெரியும் கேட்ட முடியாது என்பது.

மேலும் செய்திகள்: காமெடி நடிகர் செந்திலின் மிக பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்...
 

மீராவின் இந்த தரைகுறைவான பேச்சை, பிரபலங்கள் முதல் அணைத்து ரசிகர்களும் வன்மையாக கண்டித்தனர். மேலும் இயக்குனர் பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு மீரா மிதுன் செயலை வண்மையாக கண்டித்தார். அழகிய ஓவியத்தின்‌ மீது சேறடிப்பது போல மீராமிதுன்‌ என்கிற பெண்‌ தன்‌ வார்த்தைகளை கடிவாளம்‌ போடாமல்‌ வரம்புமீறி சிதறியுள்ளார்‌. திரையுலகில்‌ பயணிக்கும்‌ ஒரு மூத்த உறுப்பினனாக நான்‌ இதைக்‌ கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்‌.

சிறு பெண்‌, பக்குவமில்லாமல்‌ புகழ்‌ வெளிச்சம்‌ தேடிப்‌ பேசுவதை இத்தோடு நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. கவுரமாக வாழும்‌ கலைஞர்களின்‌ குடும்பத்தைப்‌ பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள்‌, துறை சார்ந்தவர்கள்‌ வேடிக்கைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கமாட்டார்கள்‌. இதுவரை பேசியதை வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌ என கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்: தென்னிந்திய காலை உணவான இட்லி - தோசை கூட மோசமானவை என்பது உங்களுக்கு தெரியுமா?
 

இதை தொடர்ந்தும் அடங்காத மீரா மீதும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பதிவுகளை பதிவிட்டு வருகிறார். 

எல்லா விஷயங்களிலும் யோக்கியம் போல் பேசி வரும் மீராவின் முகத்திரையை கிழிக்கும் விதத்தில் அவர் கஞ்சா அடிப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. ஏற்கனவே இவரை தாறு மாறாக பேசி வரும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்தல் சும்மாவா இருப்பாங்க.... 

என்ன உறி உறியுறாங்க என்பதை நீங்களே பாருங்க