கடந்த 2016 ஆம் ஆண்டு, நடைபெற்ற மிஸ் சவுத் இந்தியா அழகி போட்டியில், கலந்து கொண்டு அழகி பட்டத்தை தட்டி சென்றவர் மீரா மிதுன். இவர் தான் பெற்ற பட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி மீரா மிதுனுக்கு எதிராக தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் இவருக்கு வழங்கப்பட்ட பட்டம் திரும்பப் பெறப்பட்டதாகவும் சில தகவல் பரவியது. ஆனால் இதுவரை அந்த தகவலை மீரா மிதுன் மறுத்து வருகிறார். தன்னுடைய பெயரை கலங்க படுத்துவதற்காகவே சிலர் செயல் பட்டு வருவதாகவும் மீரா தொடர்ந்து ஊடங்கங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக, உள்ளே வந்த நாள் முதலே... தொடர்ந்து சர்ச்சைகளை எழுப்பி வந்தார். இவருக்கு சில ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்த போதிலும், சேரன் விஷயத்தில் இவர் அபாண்டமாக பழி சுமத்தியது மக்கள் மீது இவருக்கு வெறுப்பு வர காரணமாக அமைந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கிராமத்து டாஸ்க்கில், சேரன் எதார்த்தமாக மீராவை தள்ளி விட, அதனை மிகப்பெரிய பிரச்னையாக்கி, சர்ச்சையில் சிக்கினார். அதே போல் வெளியில் வந்தும் முகேன் பற்றி இவர் பேசிய ஆடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழில் இவர் கமிட் ஆகி இருந்த படங்கள் ஒவ்வொன்றும் இவரின் கையை விட்டு நழுவ,  மும்பைக்கு சென்று, பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். மேலும் தற்போது ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, மீரா மிதுன் அடுத்ததாக தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதனை உறுதி படுத்தும் விதமாக வெளியான செய்திக்கு, மீரா மிதுன் இந்த தகவல் உண்மை என்பது போன்று, ட்விட் செய்துள்ளார்.