Asianet News TamilAsianet News Tamil

ஜாமீன் கேட்டு கதறிய மீரா மிதுன்... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி..!!

வன்கொடுமை தடை சட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது  நண்பர் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இவர்களது மனுவை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
 

Actress Meera Mithun bail petition  judge adjourned
Author
Chennai, First Published Aug 19, 2021, 2:00 PM IST

வன்கொடுமை தடை சட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது  நண்பர் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இவர்களது மனுவை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

நடிகை மீராமிதுன்,  பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Actress Meera Mithun bail petition  judge adjourned

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி  கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் இவர்கள் சார்பாக ஜாமீன் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீராமிதுன் தரப்பில் இருந்து மனுதாக்கல் செய்யப்பட்டது.  அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி குறிப்பிட்ட  சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

Actress Meera Mithun bail petition  judge adjourned

ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக  புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.  பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். அதே போல் மீரா மிதுனின் ஆண் நண்பரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்த இவர்களது வழக்கை விசாரித்த, முதன்மை அமர்வு நீதி மன்றம்... இவர்களுடைய ஜாமீன் மனுவை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios