நயன்தாராவுக்கு டஃப் கொடுக்க..? 'டெஸ்ட்' படத்தில் இணைந்த 90'ஸ் கிட்ஸின் கனவு கன்னி!

நடிகை நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், 90-களின் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் டெஸ்ட் படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பை, படக்குழு புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.
 

Actress meera jasmine roped in test movie

தமிழில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படங்களான, 'தமிழ்ப் படம்', 'விக்ரம் வேதா', 'இறுதி சுற்று', 'மண்டேலா' போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த, YNOT ஸ்டுடியோஸ் அடுத்ததாக நயன்தாரா, சித்தார்த், மாதவன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் 'டெஸ்ட்' படத்தை தயாரிக்க உள்ளது. கடந்த மாதம் இப்படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது மட்டும் இன்றி, படத்தின் பூஜையும் போடப்பட்டது.

இந்த படத்தை தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்க உள்ளார். இவர் ஒரு கட்டிட வடிவமைப்பாளராக இருந்து... பின்னர் தயாரிப்பாளராக மாறியவர். பல படங்களை தயாரித்து வெற்றிகண்ட சஷிகாந்த் இப்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். பல பிரபலங்களின் சங்கமமாக இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகி வருகிறது.

Actress meera jasmine roped in test movie

கடற்கரையை ஒட்டி... 3BHK லக்ஷுரியஸ் ஃபிளாட் வாங்கிய சமந்தா! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..

அந்த வகையில், ஏற்கனவே இப்படத்தில் நயன்தாரா, சித்தார்த், மாதவன் ஆகியோர் நடிப்பது உறுதியான நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார். 90-களின் பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்கள் நடிக்காமல் ஒதுங்கியே இருந்த நிலையில், தற்போது மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளார். மீரா ஜாஸ்மின் போஸ்டர் வெளியிட்டு டெஸ்ட் படத்தில் இவர் இணைந்த தகவலை அதிகார பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது படக்குழு.

Actress meera jasmine roped in test movie

2018: 4 ஹீரோக்கள் நடிப்பில் வெளியான '2018'! கலெக்ஷனில் அடித்து நொறுக்கும் ரியல் கேரளா ஸ்டோரி! வசூல் விவரம்!

சஷிகாந்த் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. மனித உணர்வுகளின் உன்னதத்தை விவரிக்கும் விதமாகவே 'டெஸ்ட்' திரைப்படம் உருவாக உள்ளதாகவும்,  விளையாட்டுத்திறன், தோழமை உணர்ச்சி மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை மையப்படுத்தி சக்திவாய்ந்த ஒரு கதைக்களமாக இப்படம் இருக்கும் என தெரிவித்துளளார். சென்னை மற்றும் பெங்களூரில் ஜூலை 2023 வரை படப்பிடிப்பு நடித்த படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios