எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்த "அன்பே ஆருயிரே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிலா. இவரது நிஜப்பெயர் மீரா சோப்ரா. நினைவுகள் பிரிந்த காதலர்களை ஒன்று சேர்க்கும் என்ற கதையை மையமாக வைத்து எஸ்.ஜே.சூர்யா எடுத்த இந்தப்படம் செம்ம ஹிட்டானது. அதன்பின்னர் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிலா, 'ஜாம்பவான்', 'லீ', 'மருதமலை' போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வந்த நிலா, தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் மீரா சோப்ரா, பட வாய்ப்பிற்காக தனது ஹாட் போட்டோஸை பதிவிட்டு வருகிறார். லாக்டவுன் சமயத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். குறித்து ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மீரா சோப்ரா, “நான் அவருடைய ரசிகை இல்ல.... எனக்கு எப்பவுமே மகேஷ் பாபுவை தான் பிடிக்கும்” என்று பதிலளித்தார். அங்கிருந்து ஆரம்பித்தது சிக்கல். 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரண்ட் தாவணியில் கவர்ச்சி போஸ்... இன்ஸ்டாவில் புகுந்து விளையாடும் பிக்பாஸ் ஜூலி...!

ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் மீரா சோப்ராவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர். சிலரோ  “கொரோனா வந்து உங்களுடைய பெற்றோர் சாகட்டும்” என்று வாய்க்கு வந்த படி வசை பாடியதோடு மட்டுமல்லாது பாலியல் வன்கொடுமை செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதை எல்லாம் ஜூனியர் என்.டி.ஆருக்கு டேக் செய்த மீரா சோப்ரா, ”உங்களை விட மகேஷ் பாபுவை பிடிக்கும் என்று சொன்னதற்காக ஆபாச நடிகை போன்ற கேவலமாக வார்த்தைகளால் திட்டுகிறார்கள்” என்று கதறினார். “நீங்கள் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகை இல்லை என்பதால் கற்பழிக்கப்படலாம், கொலை செய்யப்படலாம், ரசிகர்கள் கூறுவது போல உங்களுடைய பெற்றோரும் கொலை செய்யப்படலாம்” என படு ஆவேசமாக பதிவிட்டிருந்தார். 

இதையும் படிங்க: அமலா பால் முன்னாள் கணவரின் அழகிய குழந்தை... முதன் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் ஏ.எல்.விஜய்...!

மேலும், மீரா சோப்ரா தன்னை படு ஆபாசமாக திட்டியவர்கள், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது ஐதராபாத் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அப்படிப்பட்ட நபர்களின் டுவிட்டர் கணக்குகளை முடக்கும் படி ட்விட்டர் நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்துள்ளார். மீரா சோப்ராவின் ட்வீட்டை பார்த்த சின்மயி, ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில் நான் படங்கள் பிடிக்கும் என கூறுவதை நிறுத்திக் கொண்டதற்கு காரணம் இதுதான். அதை வைத்தே நம்பை வாய்க்கு வந்தபடி விளாசுவார்கள். தினமும் பலாத்கார மிரட்டல்களை சந்திக்கும் நான் உங்களை புகார் கொடுக்கும் படி தான் சொல்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.