’நடிகர்களின் அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஒத்துப்போகாமல், தொடர்ந்து பெண்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்து வந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்குப் பட வாய்ப்புகளே வரவில்லை’என்று படு ஓப்பனாகப் புலம்பித் தள்ளியிருக்கிறார் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்.

பாலிவுட்டின் செக்ஸ் சிம்பள் ஆக பல வருடங்களாக சித்தரிக்கப்பட்ட மல்லிகா ஷெராவத் தமிழில் கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார். ‘ஒஸ்தி’ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.ஜாக்கிசானுடன் ‘தி மித்’ என்ற சீன படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்து வந்த மல்லிகா ஷெராவத்துக்கு கடந்த 3 வருடங்களாக படங்கள் இல்லை.நடிகர்களும் இயக்குனர்களும் அவரை ஒதுக்குவதால் தற்போது வெப் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

இந்நிலையில் தான் திட்டமிட்டு ஓரம் கட்டப்படுவதாக பகிரங்கமாக பேட்டிகள் தர ஆரம்பித்திருக்கிறார் அவர்.  ’நன் சினிமாவை விட்டு ஏதோ எனது அந்தரங்க காரணதுக்காக விலகிவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள்.நான் சினிமாவை விட்டு விலகவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். ஆனால் என்னை நடிக்க வைக்க மறுக்கின்றனர். நான் அடிக்கடி பெண் உரிமைகள் பற்றி பேசிவருகிறேன். படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தால் நம்மிடமும் இப்படித்தான் பேசுவாள் என்று என்னை கதாநாயகர்கள் ஒதுக்குகிறார்கள். காரணம் சினிமா முழுக்க முழுக்க ஆண்களின் பிடியில்தான் இருக்கிறது.

இந்தி நடிகர்கள் அத்தனை பேரும் எனக்கு பதிலாக  எல்லா அட்ஜஸ்மெண்டுக்கும் ஒத்துவரும் தங்கள் தோழிகளை நடிக்க வைக்கின்றனர். இதன் காரணமாக  கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக பட்சம் 30 பட வாய்ப்புகளை நான் இழந்து இருக்கிறேன். இனியும் என்னை அழைத்து வாய்ப்புத் தர மாட்டார்கள் என்பதால் கிடைக்கிற வெப் சீரியல்கள் அத்தனையிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன்’ என்கிறார் 42 வயதான இந்த முதிர்கன்னி.

இன்னொரு டாக் ஷோவில் ஒரு பாடல்காட்சியில் தன் தொப்புளில் ஆம்லெட் போட விரும்பி, அதை டான்ஸ் மாஸ்டரிடம் சொன்னதாகவும் ஆனால் தான் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் பங்கம் செய்திருக்கிறார் மல்லிகா.