சீனாவில் உருவான கொரோனா, உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால்,  தனிமைப்படுதலே அதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாக உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது. 

நேற்று இரவு 12 மணி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை  தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருப்பதன் அவசியம் குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்தும் வெளியீட்டு வரும் வீடியோக்களால் சோசியல் மீடியாவே நிரம்பி வழிகிறது. 

இதையும் படிங்க: அந்த இடத்தில் யாஷிகா ஆனந்த் குத்தியுள்ள நச் டாட்டூ... ரசிகர்கள் பார்வைக்காக கொடுத்த கவர்ச்சி தரிசனம்...!

இந்நிலையில் பேட்ட படத்தில் அறிமுகமாகி தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். தற்போது கோலிவுட்டின் கனவு கன்னியாக மாறியுள்ள மாளவிகா மோகனன், கொரோனா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!

தான் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள மாளவிகா மோகனன், அத்துடன் “எனது அப்பா, அம்மாவுக்காக நான் வீட்டிலேயே இருக்கிறேன்“ என்று ஒரு பேப்பரில் எழுதி காட்டியுள்ளார். 

இதையும் படிங்க: என்னது இது கொரோனா மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டிருக்கீங்க... சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

மேலும் “எனது பெற்றோர், சகோதரர் மற்றும் நாம் நேசிப்பவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நமது பொறுப்பில்லாதனம் அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், எனவே வீட்டிலேயே இருங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். உங்களுடைய பொறுப்பற்ற தனத்தால் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.