சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனுக்கு, இரண்டாம் படத்திலேயே அடித்தது ஜாக்பாட். 

தலைவர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாஸ்டர்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏப்ரல் மாதமே வெளியாக தயாராகி இருந்த இந்த திரைப்படம், கொரோனா ஊரடங்கு பிரச்சனையின் காரணமாக ரிலீசாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு இன்னும் சில தினங்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், இன்னும் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியிடும் தேதியை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்: கின்னஸ் ரெகார்டு புத்தகத்தில் இடம்பிடித்த நடிகையின் வாழ்க்கை படத்தில் கீர்த்தி சுரேஷ்?
 

இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் ஷேர் செய்த கார்ட்டூனை பார்த்த மாளவிகா மோகனன் செம்ம கடுப்பாகி தாறுமாறாக திட்டி தீர்த்துவிட்டார்.“மாஸ்டர்” டீமைச் சேர்ந்த அனிரூத், விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் எல்லாம் லாக்டவுன் காரணமாக ஒரே வீட்டில் இருப்பது போன்றும், மாளவிகா மோகானன் அவர்களுக்கு சமையல் செய்வது போன்றும் கார்ட்டூன்கள் இடம் பெற்றுள்ளது. 

இதை பார்த்து கொதித்து போன மாளவிகா மோகனன், ஒரு மூவி வீட்டில் கூட பெண்கள் சமையல் வேலை மட்டும் தான் செய்யனுமா? இப்படி பெண்கள் இந்த வேலைகளை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் முறை எப்போது சாகும் என்று கடுப்பாக பதிவிட்டார். இவரின் இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில், கடும் கண்டனங்கள் குவிந்ததால்,  சிறிது நேரத்திலேயே அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால் மாளவிகா மோகனின் பதிவிட்ட ட்வீட்டின் ஸ்கீரின் ஷாட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகள்: ஊரடங்கு ஓய்வில் வெளிவரும் குஷ்புவின் குடும்ப பொக்கிஷங்கள்! இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு!
 

இதை தொடர்ந்து மீண்டும் விஜய் ரசிகர்கள் ஒரு புதிய கார்ட்டூனை உருவாக்கி உள்ளார்கள். அதில் சமையல் கரண்டியை பிடித்த மாளவிகா மோகனின் கைகள், புத்தகங்களை பிடித்துள்ளது. இவர்களின் இந்த புதிய கார்ட்டூன் மளவிகாவை செம்ம குஷியாகி உள்ளது.

 

 

இதை பார்த்து, இந்த வெர்ஷன் மிகவும் பிடித்திருப்பதாகவும், தனக்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும் என்பது எப்படி தெரியும்?  உங்களுக்கு என செம்ம ஷாக்கிங்காக விஜய் ரசிகர்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார். மாளவிகா 
மோகனின் இந்த புத்தகம் படிக்கும் புதிய கார்ட்டூன் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.