கலை பண்பாட்டை வளர்ப்பதற்காகவும், தொன்மையான கலை வடிவங்களை பேணிக்காக்கவும், பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும்,  கலைமணி கலைமாமணி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்க்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை மதுமிதா.

மேலும் செய்திகள்: திருமணம் நடக்க தீபம் ஏற்றி பரிகாரம் செய்தாரா சிம்பு ..? வைரலாகும் புகைப்படம்..!
 

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை ஒவ்வொரு வருடமும் கலை பண்பாட்டை வளர்ப்பதற்காகவும், தொன்மையான கலை வடிவங்களைப் பேணி காப்பதற்காகவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 

அதன்படி பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சவுகார்ஜானகி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ராமராஜன், தயாரிப்பாளர் தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யோகி பாபு, மதுமிதா உள்ளிட்ட 42  திரைபிரபலன்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு நன்றி தெரிவித்துள்ளார் காமெடி நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமுமான மதுமிதா.

மேலும் செய்திகள்: நான் 10 வருஷமா லாக் டவுனில் இருக்கிறேன்... கலங்கி அழுத வைகைப்புயல் வடிவேலு..!
 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, என் இன்ஸ்பிரேசன் ஆச்சிக்கு வணக்கங்கள் சொல்லி கலைமாமணி விருதைப் பெறுவதில் மகிழ்கிறேன். இவ்விருதிற்கு தகுதியுள்ளவளாய் என்னை மாற்றிக்கொள்ள இன்னும் உழைப்பேன். தமிழக அரசிற்கும், முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும்  அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ  அவர்களுக்கும் இயல் இசை நாடக 
மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும், நளினி அம்மாவிற்கும் என் நன்றிகள்... என்னைத் தொடர்ந்து நல்ல பாத்திரங்களில் பயன்படுத்தி வரும் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும்... நேசிக்கும் ரசிகர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். என மதுமிதா தெரிவித்துள்ளார்.