80 களில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தில்லு முள்ளு,  கமலஹாசனுடன் காக்கி சட்டை போன்ற பல முன்னை நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை மாதவி.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட  மொழிகளிலும், தற்போது வரை இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

 

திருமணம் ஆன பிறகு, முழுமையாக திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர்,  தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.  பின் இவரை மீண்டும் திரையுலகில் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் மாதவியின் கணவர் சமீபத்தில் விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.  இந்த விமானத்தை இயக்க பைலட் ஒருவரையும் நியமித்துள்ளார். ஆனால் நடிகை மாதவிகோ... விமானத்தை தானே ஓட்ட வேண்டும் என்கிற ஆசை வந்து விட்டது. இதனால் மெல்ல மெல்ல விமானம் ஓட்ட பழகியதோடு, தற்போது அதற்கான லைசன்ஸ் செய்யும் வாங்கியுள்ளார்.

அனேகமாக இந்திய நடிகைகளில் விமானம் ஓட்ட கற்றுக்கொண்டதோடு, லைசன்ஸும் வைத்துள்ளனர் இவராக தான் இருப்பர் என பலரும் கூறி வருகின்றனர்.