இயக்குனராக தனது நான்காவது படத்தை விரைவில் வெளியிடவுள்ளார் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இறுதியாக அவர் ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த 2006ம் ஆண்டு வெளியான "சக்கர முத்து" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் தான் பிரபல நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 

இதையும் படியுங்கள் : 'மாமன்னன்' படத்தை வைத்து ஸ்கோர் பண்ணும் அதிமுக!

"சொல்வதெல்லாம் உண்மை" என்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இவர் பெரிய அளவில் புகழ்பெற்றார் என்றே கூறலாம். கடந்த 2012ம் ஆண்டு தமிழில் வெளியான "ஆரோகணம்" என்ற திரைப்படத்தின் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு இயக்குனராக தமிழ் திரையுலகில் களமிறங்கினார்.

அதன் பிறகு "நெருங்கி வா முத்தமிடாதே", "அம்மணி" மற்றும் "ஹவுஸ் ஓனர்" என்று இதுவரை நான்கு திரைப்படங்களை அவர் இயக்கி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி, அபிராமி, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் "ஆர் யூ ஓகே பேபி" என்ற திரைப்படத்தை தற்பொழுது இயக்கி வெளியிட உள்ளார் லட்சுமி.

இன்று அந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது, பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தின் டிரைலரை தற்பொழுது வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் சிறப்பு அம்சமாக, இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இயையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : தளபதி விஜய்க்கு கதை சொன்ன மாரி செல்வராஜ் - விஜய் கொடுத்த ரியாக்ஷன் என்ன?