பிரபல நடிகை ஒருவர் சூர்யாவிற்காக, செய்த உதவிக்கு அவர் நன்றி  தெரிவித்து ட்விட் செய்துள்ளார். இதன் மூலம் இந்த தகவல் முதல் முறையாக வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகை ஒருவர் சூர்யாவிற்காக, செய்த உதவிக்கு அவர் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். இதன் மூலம் இந்த தகவல் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் சூர்யா 'இறுதிச்சுற்று' பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்கள் மட்டும் இன்றி, அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலர் சூர்யாவின் உயிரோட்டமான நடிப்பை பார்த்து வியர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 

மேலும் இதுவரை வெளியான தமிழ் படங்களில் இந்த படம் மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்து பிரபல தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு தனது டுவிட்டரில் இந்த படத்தை தீபாவளி என்று பார்ப்பதற்காக மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றேன் என்றும் இந்த வருடம் தீபாவளி மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சூர்யா அனைத்து பெருமையும் உங்களுக்கே சேரும் என்றும், இந்த படத்தில் உங்கள் தந்தை மோகன்பாபு அவர்களின் மனதை மாற்றி அவர் இந்த படத்தில் நடிக்க வைத்து உதவியது நீங்கள் தான் அதற்க்கு நன்றிகள் என சூர்யா பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சூர்யாவின் படத்திற்கு லட்சுமி மஞ்சு உதவி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

Scroll to load tweet…