நடிகையும், நடிகர் மோகன்பாபுவின் மகளுமான லட்சுமி மஞ்சு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகையும், நடிகர் மோகன்பாபுவின் மகளுமான, நடிகை லட்சுமி மஞ்சு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த போது லக்கேஜூடன் சிக்கலை எதிர்கொண்டதாகவும், ஊழியர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னுடைய பையை சரியாக சோதனை செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நடிகை லட்சுமி மஞ்சு தனக்கு நடந்தவற்றை போவதுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சோஷியல் மீடியாவில் கூறியிருப்பதாவது: என்னுடைய லக்கேஜை திறக்க அனுமதிக்கவில்லை. அதனை ஒதுக்கி வைத்தார்கள். அவர்கள் சொல்வதை நான் செய்யாவிட்டால் என்னுடைய லக்கேஜை கோவாவிலேயே விட்டுவிடுவதாக சொன்னார்கள். ஏதேனும் பொருள் காணவில்லை என்றால் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளுமா? எப்படி அவர்களால் இது போன்று விமான நிறுவனங்களை நடத்த முடிகிறது? இனிமேல் இது போன்று விமானங்களிலிருந்து விலகியிருக்க போவதாக கூறியுள்ளார்.
லட்சுமி மஞ்சுவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லட்சுமி மஞ்சுவின் சமூக வலைதள பதிவுக்கு இண்டிகோ நிறுவனம் பதிலளித்துள்ளது. அவர்களது பையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததால் அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் பையை திறக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்களது பையை ஊழியர்கள் வாங்கிக் கொண்டார்கள். தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அந்த பையை ஊழியர்கள் வாங்கிக் கொண்டார்கள். இது தான் நடந்த சம்பவம் என்று இண்டிகோ விமானம் பதிலளித்துள்ளது.
